Monday, June 15, 2015

நாசர், விஷால், கார்த்தி மூவரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் ஜூலை, 15–ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளை வைத்து தேர்தலை நடத்த வேண்டும் என்றும் நாசர், விஷால், கார்த்தி மூவரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அத்துடன் நடிகர்கள் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் விவகாரத்தில் தற்போதைய நிர்வாகிகளுடன் இவர்கள் மோதல் போக்கையும் கடைபிடிக்கின்றனர்.

நடிகர் சங்க தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். இதனை அவரே அறிவிக்கவும் செய்தார். சரத்குமார் அணி சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி போட்டியிடுகிறார். பொருளாளராக இருந்த வாகை சந்திரசேகர் மீண்டும் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்துள்ளதால் அவருக்கு பதில் வேறு ஒருவர் நிறுத்தப்படுகிறார்.

இதர நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு இப்போது பதவியில் உள்ள பலரும் மீண்டும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷால் அணி தலைவர் பதவிக்கு நாசர் நிறுத்தப்படுகிறார் என பேச்சு அடிபடுகிறது. பொருளாளர் பதவிக்கு ராதாரவியை எதிர்த்து போட்டியிடப் போகிறேன் என்று விஷால் அறிவித்துள்ளார். இவரது அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் நிறுத்தப்படுவார் என பேச்சு அடிபடுகிறது. பொருளாளர் பதவிக்கு கார்த்தி போட்டியிடுவார் என தெரிகிறது.

தேர்தலில் இரு அணிகள் மோதுவதால் நடிகர் சங்க வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு கோஷ்டியினரும் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள்.

No comments:

Post a Comment