Sunday, June 14, 2015

விஜயின் புலி வேட்டை ஆரம்பம்!


இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள "புலி" படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் புயல் வேகத்தில் ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

புலி படத்தின் முதல் வியாபாரமாக கேரள மாநில உரிமை ஒரு பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸ் அவர்கள் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கேரளாவை அடுத்து மற்ற பகுதிகளின் வியாபாரங்களும் விரைவில் விறுவிறுப்புடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா ஸ்வேதா, சத்யன், கருணாஸ், இமான் அண்ணாச்சி, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சிம்புதேவன் இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment