Monday, June 15, 2015

வசிம் அக்ரமை முந்தினார் ஹர்பஜன்- test cricket ல் அதிக விக்கட்டுகள்


டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் என்ற சிறப்பிட சாதனையில், வாசிம் அக்ரமை ஹர்பஜன் சிங் முந்தினார்.
மழையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி இன்று டிராவில் முடிந்தது.
பஜ்ஜி என அழைக்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இம்ருள் கெய்ஸை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது 415-வது விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் 9-வது இடத்தில் இருந்த முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரமை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தைப் பிடித்துள்ளார் ஹர்பஜன்.
வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 414 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹர்பஜன் சிங் இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 416 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

No comments:

Post a Comment